விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்ட அறிக்கை “ஊடகவியலாளரும் நண்பருமான திரு.செந்தில்வேல் அவர்களின்
தமிழ்கேள்வி Youtube பக்கத்தில் மோடி, ஆளுநர், சீமான், எடப்பாடி உள்ளிட்டோரை விமர்சித்து பதிவேற்றப்பட்ட 10 வீடியோக்களை youtube-ல் இருந்து நீக்கச் சொல்லி ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Youtube நிறுவனத்திற்கும் ஒன்றிய அரசு இது குறித்து அறிவுறுத்திய நிலையில் அந்த 10 வீடியோக்களும் தமிழ் கேள்வி Youtube பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன..
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான, மோடி அரசின் இந்தப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது..
செய்தி தொலைக்காட்சியில் செந்தில் வேலின் ‘குரல்வலையை ஒடுக்கியவர்கள்’ இப்போதும் அதே வேலையை தொடர்கிறார்கள்…
இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் “குரலற்றவர்களின் குரலாய்” ஓங்கி ஒலிக்க ஊடகவியலாளர் செந்தில் வேல் அவர்களை வாழ்த்துகிறேன்..
அவரின் சமூக நீதிப் போராட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் என்றும் துணை நிற்போம்.”
Hits: 6