Fri. Mar 29th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. உலக தரவரிசையில் 7 வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும், 31 வது இடத்தில் உள்ள கோஸ்டா ரிக்கா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின் வீரர்கள் 11 வது நிமிடத்தில் டானி ஓல்மோ ஒரு கோலும், 21 வது நிமிடத்தில் மார்கோ அசென்சியோ ஒரு கோலும், 31 வது நிமிடத்தில் ஃபெரான் டோரெஸ் ஒரு கோலும் அடித்து அசத்தினார். முதல் பாதி 3-0 என்ற கணக்கில் முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் அணி வீரர்களின் கையே ஓங்கியிருந்தது. ஸ்பெயின் அணியில் 54 வது நிமிடத்தில் ஃபெரான் டோரெஸ் ஒரு கோலும், 74 வது நிமிடத்தில் கவி ஒரு கோலும், 90 வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் ஒரு கோலும், 90+2 நிமிடத்தில் அல்வாரோ மொராட்டா ஒரு கோலும் அடித்து அணியை 7-0 வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *