Wed. Feb 21st, 2024

ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணியும் இன்று முதலாவது 50 ஓவர் போட்டியில் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை 50 ஒவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் பதும் நிசாங்க 210 ரன்களும், அவிஸ்க்கா பெர்னாண்டோ 88 ரன்களும் எடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் பாரீட் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 149 ரன்களும், முஹம்மத் நபி 136 ரன்களும் எடுத்துள்ளனர். இலங்கை தரப்பில் ப்ரமோட் மதுஷன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *