Sun. Dec 4th, 2022

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. உலக தரவரிசையில் 2 வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியும், 41 வது இடத்தில் உள்ள கனடா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியின் வீரர் 44 வது நிமிடத்தில் மிச்சி பாட்சுவாய் கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னணி பெற வைத்தார்.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் 1-0 என்ற கணக்கில் பெல்ஜியம் அணி கனடா அணியை வீழ்த்தியது.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.