Sun. May 19th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் டி யில் இடம்பெற்ற தரவரிசையில் 4 வது இடத்தில உள்ள பிரான்ஸ் அணியும், 38 வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியும் இன்று மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த கிரேக் குட்வின் 9 வது நிமிடத்தில் கோல் அடித்தார். பிரான்ஸ் அணியில் 27 வது நிமிடத்தில் அட்ரியன் ராபியோட் ஒரு கோலும், 32 வது நிமிடத்தில் ஒலிவியர் ஜிரூட் ஒரு கோல் அடித்து முதல் பாதியை பிரான்ஸ் அணி தனதாக்கியது,

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பிரான்ஸ் அணியின் கையே ஓங்கியிருந்தது. பிரான்ஸ் அணியின் கைலியன் ம்பாப்பே 68 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க 71 வது நிமிடத்தில் ஒலிவியர் ஜிரூட் தனது இரண்டாவது கோலை அடித்தார்.

இறுதியில் பிரான்ஸ் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.

Views: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *