Sun. May 19th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் இ யில் இடம்பெற்ற தரவரிசையில் 11 வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணியும், 24 வது இடத்தில உள்ள ஜப்பான் அணியும் இன்று மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் 33 வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் இல்கே குயுண்டோகன் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி அட்டன்டம் 1-0 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலை வகித்தது.

ஆனால் இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஜப்பான் அணி 75 வது நிமிடத்தில் ரிட்சு டோன் ஒரு கோலும், 83 வது நிமிடத்தில் தகுமா அசனோ ஒரு கோலும் அடித்து ஆட்டத்தின் போக்கை 2-1 என்ற கணக்கில் மாற்றினர்.

இறுதியில் ஜப்பான் அணி 2-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வென்று அசத்தியுள்ளது.

Views: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *