Sat. Apr 20th, 2024

சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை, ஒன்றிய அரசு புறக்கணித்ததை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் 9 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நம்முடன் குருதி உறவு கொண்ட ஈழத்தமிழர்கள்,சிங்களப் பேரின வாத அரசால் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

மனித குலத்திற்கு எதிரான இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு இழைத்த மனிதப் படுகொலைகளை, காணாமல் போனவர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட படுகொலைகளை, போர்க் குற்றங்களை – மனித உரிமைப் பறிப்புகளை உலக நாடுகள் அறியும்.

இந்நிலையில், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் அவையின் 51ஆவது மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. இதில், மனித உரிமை மீறல்கள் குறித்து சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தீர்மானத்தை, ஒன்றிய அரசு வழக்கம் போல் புறக்கணித்துள்ளது. இதற்கான பொருள் என்னவென்றால், ஐ.நா.மனித உரிமை மன்றத்தில், சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு பக்க பலமாக, இந்திய ஒன்றிய அரசு துணை நிற்கும் என்பது தான்.

ஒன்றியத்தில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பாஜக இருந்தாலும், அவர்கள், சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாக நிற்பார்களே தவிர, மறந்தும் கூட தமிழர்கள் பக்கம் நிற்க மாட்டார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.”

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *