சிபிஐ(எம்) ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” செப்.5 ஆம் தேதி, ஆசிரியர் தினத்தன்று பள்ளிகளை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை பிரதமரின் பெயரில் ஒன்றிய அரசு அறிவித்தது. மொத்த மதிப்பு சுமார் 27 ஆயிரம் கோடிகள். அதில் பாதியை மட்டுமே ஒன்றிய அரசு கொடுக்கும். மீதியை மாநிலங்கள் செலவு செய்து பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.
ஆனால் இந்த நிதியினை புதிய கல்விக் கொள்கையை அமலாக்கும் மாநிலங்களுக்கு தான் வழங்குவோம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் வரி வருவாய் மாநிலங்களில் இருந்துதான் வருகின்றது. கல்வி குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் மாநிலங்களுக்கும் சம பங்கு உள்ளது.
கல்வி என்பது பொது பட்டியலில் உள்ளது.
இந்த இரண்டையுமே மதிக்காமல் அறிவிக்கப்பட்டிருப்பதுதான் புதிய திட்டம். பாஜக திணிக்க நினைக்கும் கல்விக் கொள்கையை ஏற்கும் பாஜக மாநிலங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசின் நிதி என்ற அநியாயத்தை கொள்கையாக அறிவிக்கிறார்கள்.
இது சட்டவிரோதமானது, பாரபட்சமானது, கண்டனத்திற்குரியது. “
Hits: 0