ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை முகமது ஷமி தட்டி சென்றார்.
இன்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் பட்லர், கிரைக் ஓவர்டன் விக்கெட்டை கைப்பற்றி இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
முகமது சாமி தனது 80 வது போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை படித்துள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவில் அஜித் அகார்கர் 97 மேட்ச்களில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்
மேலும் உலக அளவில் ரசித்கானுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்துள்ளார். 150 விக்கெட் வேகமாக வீழ்த்திய வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிட்சல் ஸ்டார்ஸ் 77 மேட்ச்களிலும், பாகிஸ்தானை சேர்ந்த சக்லைன் முஸ்தக் 78 மேட்ச்களிலும் இந்த சாதனை படைத்துள்ளனர்.
Hits: 22