இன்று நடந்த ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்டில் 2-1 முன்னிலை பெற்றிருந்தது இந்திய அணி. கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஐந்தாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன்களும், இங்கிலாந்து அணி 284 ரன்களும் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 142 (173) ரன்களும், பேர்ஸ்டோவ் 114 (145) ரன்களும் எடுத்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-2 என டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
Hits: 3