15 வது ஐபிஎல் சீசன் 59 வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியில் டோனி 39 (33) ரன்கள் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.16 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டும் எடுத்தது. மும்பை அணி சார்பில் டேனியல் சம்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 34 (32) ரன்கள் எடுத்தார்
Hits: 1