Sat. May 4th, 2024

சென்னை : மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒன்றிய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி , சென்னையில் பழுதடைந்துள்ள வானிலை ரேடார்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு 02.12.2020 , 12.11.2021 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதியிருந்தேன் , மேலும் நாடாளுமன்றத்தில் பலமுறை இதுகுறித்து கேள்வியும் எழுப்பியுள்ளேன் . இருப்பினும் எவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை .

இந்த ரேடாரின் பழுதை சீரமைக்காததால் , நேற்று பெய்த கனமழை குறித்த முன்னறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்கமுடியவில்லை . இதுகுறித்த கேள்விகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் நா.புவியரசன் அவர்கள் , இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து கொண்டு இவ்வளவுதான் தரவுகள் தரமுடியும் என விளக்கம் அளித்துள்ளார் . சென்னையில் நேற்று இப்பெருமழையினால் குழந்தைகள் , முதியோர்கள் , கர்ப்பிணிப் பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சந்தித்த இன்னல்களுக்கு ஒன்றிய அரசின் தாமதமே காரணம் .

அதுமட்டுமல்லாது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ள நிவாரண நிதி குறித்து மூன்று முறை கோரிக்கை வைத்தும் இன்னும் ஒன்றிய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை . இச்சூழ்நிலையில் சென்னையில் பழுதடைந்துள்ள வானிலை ரேடார்களையும் அது சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களையும் சீரமைக்கவில்லை . மக்களின் துயரை போக்கிட ஒன்றிய அரசு உடனடியாக ரேடார்களை சீரமைக்க போர்க்கால அடிப்படையி ல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , தமிழ்நாடு அரசு கோரிய மழை வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் .

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *