Sat. May 18th, 2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தி

” இனிமை சூழ்ந்து இன்னல் அகன்று ” அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு

தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து , மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளேன் .

நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும் .

” யாதும் ஊரே , யாவரும் கேளிர் ‘ எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக விளங்கிடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் .

Views: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *