Fri. May 17th, 2024

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியானது.

100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது!

இப்பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா!

90 புள்ளிகளுடன் டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்திலும், 11 புள்ளிகளுடன் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்திலும் உள்ளன.

ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும்.

நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மொத்தம் 180 நாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன!”

Views: 28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *