Thu. Oct 6th, 2022

சிபிஐ(எம்) மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கும், அப்பாவிகளை கொன்று அழித்த பல பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பினை பற்றி யஷ்வந்த் சிண்டே என்ற ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர் – நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள செய்திகள் பெரும் அபாயத்தை உணர்த்துவதாக உள்ளன.

2006 ஆம் ஆண்டு, மராட்டியத்தில் நான்டெட் என்ற மாவட்டத்தில் 2 பேர் குண்டு தயாரிக்க முயன்று, அது வெடித்ததால் இறந்து போனார்கள்.

இந்த சம்பவம் ஒரு தனித்த குண்டு வெடிப்பாக பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு மசூதியை தகர்க்க சதி செய்தது இப்போது பிரமான பத்திரத்தில் வெளிப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் தொடர்ந்து பல இடங்களில் குண்டு வெடிப்பை நடத்தி மக்களை கொன்று குவிக்க துணிந்துள்ளார்கள்.

இதற்காக வெடிகுண்டு தயாரிப்பதற்கான பயிற்சியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் ஏற்பாடு செய்தது. சில ராணுவ வீரர்களிடம் நவீன ஆயுத பயிற்சி பெற்றதாகவும் இந்த வாக்குமூலம் வெளிக்கொண்டுவந்துள்ளது.

இதனால் மாலேகான் குண்டுவெடிப்புகள், சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு பயங்கரவாத சம்பவங்களுக்கு இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தியிருக்கும் அவர் – பாஜகவின் தேர்தல் வெற்றியை மனதில் கொண்டே இந்த கொடூரச் செயல்களை திட்டமிட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ்/வி.ஹெ.பி & பாஜக தலைவர்களுக்கு இந்த திட்டங்களை பற்றி சொன்ன பிறகும் அவர்கள் இந்த கொடூரச் செயல்களை தடுக்க எதையும் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

(இதில் பல சம்பவங்களில் போலியாக பல முஸ்லிம் சிறுபான்மையினர் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் துன்புருத்தலுக்கு பின் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது)

இப்போதும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் சிண்டே தெரிவிக்கும் கருத்துக்கள் – அது ஒரு அபாயகரமான பயங்கரவாத அமைப்பு என்பதையும், அதன் பரிவார அமைப்புகள், அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கோடு எப்படிப்பட்ட கொடூரத்தையும் செய்யத் துணிவார்கள் என்பதையும் உணர்த்துகின்றன.

ஆர்.எஸ்.எஸ் – ன் பயங்கரவாத முகத்தை ஆளும் வர்க்க ஊடகங்களும் பேசுவதில்லை. தன்னுடைய கோர முகத்தை அதிகாரத்தின் திரைச் சீலையில் மறைத்துக் கொண்டு தொடர்ந்து செயல்படலாம் என்று தைரியமாக இருக்கிறார்கள்.

காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேச பக்தன் என்று பேசியவரும், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியவருமான பிரக்யா தாக்குர் இப்போதும் காவி உடை உடுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வருகிறார்.

குஜராத் கலவரத்தில் கொடூர கொலைகளையும், பாலியல் வன்கொடுமையும் செய்த கும்பல் ஆரத்தி தட்டோடு வரவேற்கப் படுகிறார்கள்.

அந்த பயங்கரவாதப் படையின் தமிழக வாரிசாகவே அண்ணாமலையும் இன்ன பிற பரிவார அமைப்புகளும் கொடும் திட்டங்களோடு செயல்பட்டு வருகிறார்கள்.

வரவிருக்கும் அபாயத்தை முன் உணர்ந்து – ஆர்.எஸ்.எஸ்/பாஜக பயங்கரவாதிகளுக்கு எதிராக தேச பக்தர்கள் அனைவரும் திரள்வதோடு, இவர்களின் சதித் திட்டத்தை தடுத்து முறியடிக்க வேண்டும். “

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.