அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி ” பொன் ஓணம் திருநாளைக் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
ஓணம் திருநாள் கேரள மக்களின் அறுவடைத் திருநாள் என்பது மட்டுமின்றி , சாதி , மதங்களுக்கு அப்பாற்பட்டு மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் கொண்டாடி மகிழும் நாள் .
நாடாளும் சக்கரவர்த்தியாக இருந்தாலும் , ஆணவம் அழிவையே ஏற்படுத்தும் என்பதையும் , எல்லோரையும் அன்போடு நேசித்து அரவணைப்பவரே மக்கள் மனங்களை வெல்ல முடியும் என்பதையும் மகாபலி சக்கரவர்த்தியின் வழியாக ஓணம் நமக்குச் சொல்லித் தருகிறது .
இந்நன்னாளில் சாதி , மதங்களைக் கடந்து , அனைவரும் சகோதரர்களாக வாழ்வதற்கு உறுதியேற்போம் . பேசுகிற மொழி வெவ்வேறாக இருந்தாலும் , இந்தியர் என்ற உணர்வோடு ஒன்றுபட்டு நிற்போம் .
பொன் ஓணம் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் , மன நிறைவையும் கொண்டு வந்து சேர்க்கிற திருநாளாக அமைய வாழ்த்துகிறேன் .”
Hits: 7