Fri. Apr 26th, 2024

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மாற்றுக்கருத்து கொண்ட அரசியல் கட்சிகளின் ஏராளமான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டுமென்றும், சில கருத்துப்பதிவுகளை நீக்குமாறும் மத்திய அரசு வற்புறுத்துவதாக சமூகவலைதளமான ட்விட்டர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் தொழில்நுட்பச் சட்டங்களைக்கூட பின்பற்றாமல், கணக்குகளையும், பதிவுகளையும் நீக்குமாறு அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் வழக்கும் தொடர்ந்துள்ளது. அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதன் மூலம், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது நியாயமற்றது.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்களின் கோழைத்தனமான இச்செயலை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது. அதிகாரம் மிக்கவர்கள்,அதைத் தவறாகப் பயன்படுத்துவதை இனியாவது கைவிட வேண்டும்.”

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *