Sun. May 19th, 2024

அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தேசதந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை தேர்வு செய்து தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்தப் போவதாக பயங்கரவாத ஆர்எஸ்எஸ் அறிவித்திருக்கிறது, காந்தியடிகளை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆர்எஸ்எஸ் சுதந்திர இந்தியாவில் பயங்கரவாத அமைப்பு என்று முன்று முறை தடைச்செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர்-6 அன்று பாபர் மசூதியை இடித்ததும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பாகும் இத்தகைய வன்முறைப் பின்னணி கொண்டவர்களுக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் வழி காட்டுதலைத் தந்திருப்பது பெரும் அதிரச்சி அளிக்கிறது இந்நிலையில் சமூக நல்லிணக்கதைச் சிதைக்க முயலும் சங்பரிவார் சனாதன சக்திகளின் சூழ்ச்சியைக் கண்டிக்கிற வகையில் தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் அக்டோபர்-2 அன்று மாலை 4மணியளவில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறுமென விடுதலைச் சிறுத்தைகள்,சிபிஎம்,சிபிஐ ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர் இந்த மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பு மதச்சார்ப்பற்ற சனநாயக சக்திகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளர்,இந்த அறிவிப்பை அதிமமுக மனதார வரவேற்கிறது மனிதச்சங்கிலியில் திரளாக பங்கேற்போம் மக்கள் ஒற்றுமை,மதச்சார்பின்மை சமூக நல்லிணக்கம்,சமூக அமைதி,தமிழக வளர்ச்சி ஆகியவற்றை பாதுகாத்திட இந்த சமூக நல்லிணக்க மனிதச்சங்கியில் தமிழகம் முழுவதும் அதிமமுகவினர் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்,அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய மனுதர்ம வாதிகள் முயற்சிப்பதை முறியடிப்போம்,மதவாதம் பேசுபவர்களிடம் இருந்து மக்கள் விலகி இருக்க அன்புடன் வேண்டுகிறன்.

Views: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *