Sun. May 19th, 2024

ஆளுநர் ரவி சில தினங்களுக்கு முன்பு திராவிடம் என்ற பெயரை வழங்கியது ஆங்கிலயேர்கள் என்று கூறியிருந்தார். அதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் TRB ராஜா அவர்களின் பதிலடி அறிக்கை “விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவர்களைத் #திராவிடர்கள் என்று முதன்முதலில் குறிப்பிட்டவர்கள் ஆங்கிலேயர்களா?

ஆளுநரே…ஆங்கிலேயர் இங்கே வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உங்கள் ஆதிசங்கரர், ‘திராவிட சிசு’ என்று திருஞானசம்பந்தரைக் குறிப்பிட்டிருக்கிறார்…

உங்கள் சனாதன தர்மத்தை நிலைநிறுத்தும் மனுதர்ம சாஸ்திரத்திலேயே பவுண்டரம், ஔண்டரம், ‘#திராவிடம்’, காம்போஜம் என்று தேசங்களை வரையறுத்திருக்கிறார்கள்.

ஸ்மிருதியிலும் பஞ்சதிராவிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பழமையான பிராமி மொழி கல்வெட்டிலும் #திராவிடம் என்ற சொல் இருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் தனது ஆராய்ச்சியில் நாகர்களாகிய #திராவிடர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தனர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

விந்தியமலைக்கு தெற்கே அல்ல, இமயமலை வரையிலும் இருந்தவர்கள் #திராவிடர்கள். கைபர்-போலன் கணவாய் வழியாக ஊடுருவி வந்தவர்கள் ஆரியர்கள்.

மைக்கும் மேடையும் கிடைத்தால் எதையாவது பேசி, நீங்கள் நம்பும் சனாதனத்துக்கு முட்டுக் கொடுப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.”

Views: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *