Tue. May 21st, 2024

நடைபெற்று வரும் 15 வது சீசன் ஐபிஎல் 19 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி கேபிடல்ஸ் :
தொடக்க வீரராக களமிறங்கிய ப்ரித்வி ஷா 51 ரன்களும், வார்னர் 61 ரன்களும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பின்னர் வந்த வீரர்கள் தங்களது பங்குக்கு அதிரடியாக விளையாடினர். 20 ஓவர் முடிவில் 215-5 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 54(33) தவிர மற்ற அனைவரும் டெல்லி அணியின் பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Views: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *