Thu. Apr 25th, 2024

நடைபெற்று வரும் 15 வது ஐபிஎஸ் சீசனின் 17 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சென்னை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய உத்தப்பாவும் ருத்ராச் கெய்க்வாட்டும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அவர்கள் பின் வந்த மொய்ன் அலி தன் பங்குக்கு 48 (35) ரன்கள் அடிக்க அவருக்கு உறுதுணையாக ராயுடு 27 (27) ரன்கள் அடித்து அவுட்டானார்கள். கடைசி கட்டத்தில் ஜடேஜா தன் பங்குக்கு அதிரடியாக 25(15) ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 154 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா அதிரடியாக 75 (56) ரன்களும், கேன் வில்லியம்சன் 32 (40) ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். ராகுல் திரிபாதி 39(15) அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *