Tue. Apr 30th, 2024

நடைபெற்று வரும் 15 வது சீசன் ஐபிஎல் 20 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் :
அணியில் ஹெட்மயேர்59(36) அதிரடியால் 20 ஓவர் முடிவில் 165-6 ரன்கள் எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சார்பில் கிருஷ்ணப்ப கௌதம் 2 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் :
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இ இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் 38(17) தவிர மற்ற அனைவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *