Thu. May 16th, 2024

சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்களின் கண்டன அறிக்கை ” புதுச்சேரியில் தியாக சுவரில் சாவர்க்கர் பெயரை பதிப்பது என்பது வரலாற்று திரிபு ஆகும். அவரது பெயர் எக்காலத்திலும் அங்கு பதிவு செய்யப்படலாகாது. இந்த வரலாற்று திரிபை கண்டிக்கிறேன்.

சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட ஒன்றரை மாதங்களுக்குள் 1911 ஆகஸ்ட் 29 தொடங்கி 9 ஆண்டுகளில் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை மகாராணிக்கு எழுதினார். இந்தியாவை அடி மைப்படுத்திய பிரிட்டீஷாரிடம் இருந்து மாதம் ரூ 69 ஓய்வூதியம் பெற்ற ஒரே ‘போராளி’ சாவர்க்கர் மட்டுமே.

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றியதற்காக அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பலர் சித்ரவதைகளை அனுபவித்து அங்கேயே உயிர் நீத்தனர். ஆனால் சிறையிலிருந்து மன்னிப்பு கடிதங்கள் எழுதி விடுதலை பெற்றவர் சாவர்க்கர் இதன் பிறகு ஆங்கிலேயேர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டவர் சாவர்க்கர்

புதுச்சேரி விடுதலைக்கு சற்றும் தொடர்பில்லாதவர் சாவர்க்கர். நேதாஜி படைக்கு எதிராக படை கட்டியவர். தேச தந்தை காந்தியடிகளின் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சாவர்க்கர். “

Views: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *