Fri. Dec 1st, 2023

அமமுக பொதுச்செயலார் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், அவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசு முன் வர வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு மருத்துவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்து, ‘ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்த திரு.ஸ்டாலின் முதலமைச்சராகி ஓராண்டு ஆன பின்னும் அதனை நிறைவேற்றாமல் இருப்பது நம்பிக்கை துரோகமாகும்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஏழை, எளிய மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மனசாட்சியோடு நிறைவேற்றாமல் இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா?”

Hits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *