Fri. Apr 26th, 2024

தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தை ஒன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பள்ளிகளில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்த வண்ணம் உள்ளது. அதனை தடுக்க அதற்கான தீர்வுகள்

“1. விழிப்புணர்வு:
ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் முறை (code of conducts) & மீறும்பட்சத்தில் மாணவர்கள் என்ன செய்யவேண்டும் – என எல்லாப் பள்ளிகளிலும் ஆங்காங்கே பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

  1. External Auditing System:
    பள்ளிகளுக்கு வெளியே இருந்து வந்து மாணவர்களுடன் ஆய்வாளர்கள்/மனநல நிபுணர்கள் தனியாக (closed door discussions) உரையாடி கோரிக்கைகளை கேட்கவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.
  2. கடுமையானத் தனிச்சட்டம்:
    தவறு இழைத்தோர் & துணைசென்றோர் ஆகியோருக்கு கடுமையானத் தனிச் சட்டம் இயற்றவேண்டும்.
  3. நன்னெறி வகுப்புகள் (Moral Education):
    ஆணாதிக்கச் சிந்தனையை பள்ளி வயதிலிருந்தே அகற்றவேண்டும்.

சக பெண் மாணவ நட்பு எப்படி இருக்கவேண்டும்…

திரைப்படங்களில் கதாநாயகர்களின் ஆணாதிக்கச் சிந்தனை…

குடும்பங்களில் உள்ள ஆணாதிக்கம்..

இதனை அந்த நன்னெறி வகுப்புகளில் விவாதிக்கவேண்டும்.

அந்தப் பள்ளி வயதிலேயே இதுபோன்ற சிந்தனைகளை அகற்றிவிட்டால் வளரும் பருவத்தில் அவர்கள் தவறிழைக்க வாய்ப்புகள் குறைவு. இதில் பெற்றோர்கள் பங்கும் அதிகமிருக்க வேண்டும்.

  1. தயார்படுத்துதல்:
    தன்னைப் பற்றிய தவறான படங்கள் வெளியாகும்பட்சத்தில், ‘உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவு இதில் ஒன்றுமில்லை. உறுப்புகள் தான்’ எனச் சொல்லி, அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிவுத்த வேண்டும்.

யாரும் மிரட்டும் பட்சத்தில், “போடா வெண்ண” எனச் சொல்லி எங்கு எப்படிபுகார் செய்யவேண்டும் என பயிற்சி அளிக்கவேண்டும். “Stay strong” – ஒற்றை மந்திரச் சொல்.

  1. பொதுப்பாலின பள்ளி & வகுப்புகள்:
    ஒரு பள்ளியில் / வகுப்பில் ஆண், பெண், 3ம் பாலினத்தவர் கலந்து இருக்கும் படிச் செய்தால் தான் புரிதல் ஏற்படும்.

இந்த தனிப்பள்ளிகள், பாதுகாப்பு என்ற பெயரில் நமக்குநாமே வைத்துக்கொள்ளும் ஆப்பு. பிற்போக்குச் சிந்தனை.

மத அமைப்புகள் நடத்தும் பள்ளிகளைக் கட்டுக்குள் வைக்கவேண்டும்.

அங்கு ஏதேனும் நடந்து அரசு அதன் மீது நடவடிக்கை எடுத்தால் அதனை அப்படியே சாதி/மதப் பிரச்சினையாக மாற்றிவிட வாய்ப்புகள் உண்டு.

இவையெல்லாம் ஏற்கனவே உள்ளனவா எனத் தெரியவில்லை. இல்லை என்றால் இதனை தாமதிக்காமல் அனைத்து பள்ளிகளிலும் அரசு அமல்படுத்த வேண்டும்.

அதனை தடுக்க அரசு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

முக்கியமாக point no.5 ஐ ஒரு regular exercise ஆக அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் வைக்கவேண்டும்.”-திரு.ஹிலால் ஆலம்@HilaalAlamTamil (அறிவியல் எழுத்தாளர்)

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *