Thu. Mar 28th, 2024

சேது . கருணாஸ் B.A. , Ex . M.L.A. , துணைத்தலைவர் , தென்னிந்தியா நடிகர் சங்கம் , அவர்கள் வெளியிட்ட அறிக்கை

“நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் , பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது . இருளர் பழங்குடியினரின் வாழ்வியலை , அவர்களின் அறப்போராட்டத்தை மெய்யாக படம் பிடித்ததால் வெற்றியடைந்தது . ஆனால் வம்படியாக ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராகவும் , நடிகர் சூர்யாவிற்கு எதிராகவும் பா.ம.க.வினர் அராஜகம் செய்கின்றனர் , இந்த திரைப்படத்தை சாதி ரீதியான சிக்கலுக்குள் அடைக்கின்றனர் ; வீண்வம்பு செய்கின்றனர் . இது வன்மையாகக் கண்டிக்கத்தது .

தங்களது சமுதாயத்தை புண்படுத்தும்படியான காட்சிப்படம் திரைப்படத்தில் இடம்பெற்றதாய் பா.ம.கவினர் குரல் கொடுத்தனர் . அதை நீக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தனர் . அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடிகர் சூர்யா அந்த காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார் . பிரச்சனை முடிந்தது .

ஆனால் மீண்டும் , மீண்டும் பா.ம.க.வினர் வம்படி செய்வதும் , திரைப்பட சுவரொட்டியை கிழிப்பதும் , திரையரங்களில் படம் ஓடவிடாமல் தடுப்பதும் அரம்பத்தனத்தின் உச்சம் . தொடர்ந்து இதை திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள் !

நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்துவருவதும் , சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பா.ம.க மாவட்டச் செயலாளர் அறிவிப்பதெல்லாம் , என்ன அரசியல் அறம் என்று புரியவில்லை . எதாவது ஒன்றில் அரசியல் சூழலில் சரிக்கினால் , அடுத்து உடனே எதாவது செய்து பரப்பரப்பாக வேண்டும் . என்ற அரசியல் நோக்கில் இப்போது பா.ம.க. ஜெய்பீம் திரைப்படத்தை பயன்படுத்தி இறங்கியுள்ளது .

அரசியல் , ஜாதி , மத , இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு நடிகர் சூர்யா தமிழ்ச்சமூகத்திற்கு பங்காற்றுகிறார் . ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கிடைக்கும் படி செய்து பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறார் ! தமிழ்ச்சமூகத்திற்கு ஏதாவது ஒன்றென்றால் முன்னத்தி ஏராக நிற்கிறார் . ஜெய்பீம் திரைப்படத்தோடு அவர் நின்றுவிடவில்லை அதற்கும் மேலாக அந்தப் படத்தில் வாழ்ந்த இருளர் சமூக மேம்பாட்டிற்கு ஒரு கோடி நிதி தருகிறார் . இப்படிப்பட்ட மனித நேயரை சமூக அக்கறை கொண்ட கலைஞனை இனி விமர்சிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன் !”

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *