Sun. May 19th, 2024

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சுங்க கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டி அறிக்கை “பெட்ரோல் , டீசல் , சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு சுங்க கட்டணத்தை ரூ . 40 முதல் ரூ .240 வரை உயர்த்தி மக்கள் மீது மென்மேலும் சுமையை ஏற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன் . சுங்க கட்டண உயர்வால் அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து பூ , பழம் , காய்கறி , பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது . இதன் காரணமாக வாடகை வாகனங்களின் கட்டணத்தை உயர்த்தும் நிலைக்கு அதன் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது . மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசே , விலை உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுவது எந்த வகையில் நியாயம் . இதற்காகத்தான் மத்திய மாநில அரசுகளை மக்கள் தேர்ந்தெடுத்தார்களா ?. வரி , வரி என்று வலியை சுமத்தும் அரசை மக்கள் விரும்ப மாட்டார்கள் . உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறுவதுடன் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும் . உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி போல , மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விலைவாசியை உயர்த்தி , ஏழை எளிய நடுத்தர மக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கி படுகுழியில் தள்ளியுள்ளது .”

Views: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *