Sun. Apr 21st, 2024

தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “திமுக அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதில் அதிமுகவும் பாஜகவும் திட்டமிட்டு ஒன்றாக செயல்படுகின்றன!

கடந்த 4 ஆண்டுகளில் அதிக வெளிநாட்டு போதை பொருட்கள் புழக்கத்தில் உள்ள மாநிலமாக தொடர்ந்து பாஜக ஆளும் குஜராத் மாநிலம் உள்ளது!

தேசிய புலனாய்வு அமைப்பு கைப்பற்றிய விலை உயர்ந்த பல தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குஜராத்தில் தான் அதிகம். கைப்பற்றிய பொருட்களை அந்த அமைப்பு பாதுகாப்போடு வைக்காமல் நீதிமன்றத்தில் வந்து போதை பொருட்களை காணவில்லை என அமித்ஷாவின் அமைச்சகம் கை கட்டி தலைகுனிந்துள்ளது.

இந்தியாவில் கஞ்சா புழக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் உத்திரபிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது.

இது வரை அதிமுகவும்,பாஜகவும் அது பற்றி வாய் திறக்கவில்லை!

டெல்லியில் பிடிபட்ட போதை பொருட்கடத்தலில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யபட்டாலும் தமிழ்நாடு அரசையும் திமுகவையும் மோடி தொடங்கி குட்கா புகழ் எடப்பாடி வரை அவதூறு பேசுவது திட்டமிட்ட செயல் ஆகும்!

தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்ட மோடி, எடப்பாடி கும்பல் அவதூறுகளில் திமுகவை வீழ்த்தலாம் என எண்ணுகிறார்கள். உங்கள் நயவஞ்சக ஆசை ஒரு போதும் இங்கு நிறைவேறாது!”

Visits: 23

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *