Sun. Apr 21st, 2024

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.

மயிலாடுதுறை பாஜக மாவட்டத்தலைவர் அகோரம் தலைமையிலான ரவுடி கும்பல் தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பல கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை பறித்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் மயிலாடுதுறையில் சீட் வாங்க முயற்சித்து வரும் அகோகரம் தேர்தல் செலவிற்காக
ரூ.20 கோடி பணத்தை லம்ப்-ஆக மிரட்டி பறிக்க முயற்சித்த போது மாட்டிக்கொண்டார்

தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதோடு, ஆதீனத்தின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக, பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உள்ளிட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதாகி உள்ள அகோரம், ராதாநல்லூர் பகுதியை சேர்ந்தவர். ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். முன்பு பாமகவில் இருந்து பாஜகவில் இணைந்தவர். இவர், கடந்த தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். அகோரம் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Visits: 65

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *