Tue. Apr 23rd, 2024

ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் கோகோயின் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவரின் மகன் உட்பட பத்து பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளனர்.

கச்சிபௌலியில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டல் அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டியின் போது கோகோயின் அருந்தியதற்காக பாஜக தலைவர் ஜி யோகானந்தின் மகனும், ஆந்திர முன்னாள் முதல்வர் கே ரோசய்யாவின் பேரனுமான கஜ்ஜாலா விவேகானந்த் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதே வழக்கில் சையது அப்பாஸ் அலி ஜெஃப்ரி, நிர்பய் மற்றும் கேதர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, ஹோட்டலில் சோதனை மேற்கொண்ட போலீசார், கோகைன் அடங்கிய மூன்று பிளாஸ்டிக் கவர்கள் (ஒவ்வொன்றும் ஒரு கிராம் எடையுள்ளவை) போதைப்பொருள் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற காகிதம் மற்றும் மூன்று செல்போன்களை கைப்பற்றினர்.

முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, ஜூப்ளி ஹில்ஸில் உள்ள கஜ்ஜாலா விவேகானந்தின் இல்லத்துக்கு போலீஸ் குழு சென்றது.

அவர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார், அப்போது அவர் ராடிசன் ப்ளூவில் உள்ள தனது ஹோட்டல் அறையில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்ததை ஒப்புக்கொண்டார், அங்கு கோகோயின் உட்கொண்டார்.

மருத்துவப் பரிசோதனையில் விவேகானந்தருக்கு போதைப்பொருள் இருப்பது உறுதியானது.

37 வயதான விவேகானந்த், மஞ்சீரா குழும நிறுவனங்களின் இயக்குனரும், தொழிலதிபர் ஜி யோகானந்தின் மகனும் ஆவார், இவர் முந்தைய தெலுங்கானா தேர்தலில் செரிலிங்கம்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

இந்த வழக்கில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *