Wed. Feb 21st, 2024

லோக்சபாவில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு நிதி பகிர்வு அளித்துவிட்டு, தென் மாநிலங்களை ஓரவஞ்சனையுடன் நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஒன்றிய பாஜக அரசுக்கும் தென் மாநிலங்களில் ஆளும் அரசுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவதில் அநீதி இழைக்கப்பட்டு வருவதாக, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்ஜெட் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் தங்கள் மாநிலத்திற்கு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது குஜராத் மாநிலத்திற்கு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டி டுவிட் போட்டிருந்தார். அந்த டுவிட் “குஜராத் மக்கள் 60 ஆயிரம் கோடியை அளிக்கிறார்கள். ஆனால், திரும்ப எவ்வளவு வருகிறது? பிறகு நாங்கள் கொடுக்கிறோம் என்று சொல்கிறீர்கள். குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா? நாங்கள் பிச்சைக்காரர்களா?.. டெல்லி கருணையில் தான் நாங்கள் வாழ வேண்டுமா? பிரதமரின் மொழி அவர் வகிக்கும் தகுதிக்கு பொருத்தமாக இல்லை” என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பழைய பதிவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் பிரதமர் மோடியை சாடியிருக்கிறார்.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *