Wed. Feb 28th, 2024

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் நாடாளுமன்ற செயல்பாடுகள் ராஜ்யசபாவின் இணையத்தில் முழுமையாக இருக்கிறது.

07/07/2021 ல் ஒன்றிய அமைச்சராக பொறுப்பேற்ற தினத்தில் இருந்து ஒரே ஒரு நாளாவது தமிழ்நாட்டிற்காக திரு.முருகன் ஏதாவது பேசியுள்ளாரா என்று தேடினால்,அப்படி எந்த தகவல்களும் ராஜ்யசபாவின் குறிப்புகளில் இல்லை.

07/07/21-ல் இருந்து இதுவரை,நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்டதில்லை, ஒரு தனி மசோதா கொண்டு வந்ததில்லை, அவையின் விவாதங்களில் 20 கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார்
அதில் ஒன்று கூட தமிழ்நாடு சார்ந்தது இல்லை என்கிறது ராஜ்யசபாவின் ஆவணங்கள்.

மேலும் 27/09/2021 ல் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால்,
அவருடைய MP நிதியும் மத்திய பிரதேசத்திற்கே செலவழிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டிற்காக செலவு செய்யவில்லை.

“இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை AIIMS, IIM, IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கு “தகுதியற்றவர்கள்” என எந்த காரணமும் இன்றி வேண்டுமென்றே அறிவிக்கப்படுவதற்கு எதிராக எந்த கேள்வியும் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் இதுவரை கேட்டதில்லை.

Visits: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *