Tue. Apr 23rd, 2024

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் சிவமதன் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக 7.50 லட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி கேட்ட ஆகாஷயும், அவர் தாயாரையும் சிவமதன் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஆகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த உசிலம்பட்டி நீதிமன்ற நீதிபதி “பண மோசடியில் ஈடுபட்டும், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவர்களை தாக்கிய குற்றத்திற்காகவும் பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் சிவமதன், அவர் மனைவி அபிராமி, மாமனார் செல்வம் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனையும், மூவரும் ரூ. 2,50,000 நஷ்டயீடும் வழங்க வேண்டும்” எனவும் தீர்ப்பளித்தார்.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *