Tue. Apr 23rd, 2024

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் அலுவலக அறையி்ல் 01-12-23 ம் தேதியன்று DVAC போலீஸார் சோதனை நடத்தச் சென்றனர்.

மதியம் 2.40 மணிக்கு சென்ற போலீஸாரை மாலை 6 மணிவரை ED அலுவலகத்தில் சோதனையே நடத்தவிடாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தடுத்தனர்.

கிட்டதட்ட மூன்றரை மணி நேரம் DVAC போலீஸாரை வெறுமனே அமர வைத்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த விவகாரத்தில், அமலாக்கத்துறை உதவி இயக்குனருக்கு மதுரை தல்லாகுளம் போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்சம் சோதனை செய்தபோது பணி செய்ய விடாமல் தடுத்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் மதுரை தல்லாகுளம் போலீஸார்.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *