Sun. Jun 23rd, 2024

திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “உத்தரப்பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ ராம் துலர் கவுருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்.

கேள்விகள்:

(1) சம்பவம் 2014ஆம் ஆண்டு நடந்தது. ஆனால், அவருக்கு 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக சீட் கொடுத்தது ஏன்?

(2) Rape பாலியல் வன்கொடுமை என்ற கடும் குற்றம் புரிந்த வழக்கில் சிக்கியவர் என தெரிந்தும் அவரை வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்தது ஏன்?

(3) போக்ஸோ வழக்கு 9 ஆண்டுகளாக நடந்து இப்போது தாமதமாக தீர்ப்பு வெளியாக காரணம் என்ன?

(4) “ராம் துலர் கவுர் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் குடும்பத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்தார்” என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார். அவரை காப்பாற்ற பாஜக முயற்சித்து பிறகு கைவிட்டது ஏன்?

(4) பாஜக நடத்தும் சமூக நீதி நாடகத்திற்கு தலித்துகளும், பழங்குடியினரும் பயன்படுத்தி தூக்கி எறியப்படுகிறார்களா? “

Views: 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *