Tue. Apr 23rd, 2024

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் சொதப்ப சூர்யகுமார்யாதவ், ரிங்கு சிங் அதிரடியால் 20 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார்யாதவ் 56 (36), ரிங்கு சிங் 68 (39) ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா அணியில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மழை பெய்ததால் 15 ஓவருக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 49 (27) ரன்களும், ஐடன் மார்க்ராம் 30 (17) ரன்களும் எடுத்திருந்தனர்.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *