Tue. Apr 23rd, 2024

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்களவைக்குள் 2 நபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பொருட்களை கையில் கொண்டு வந்த அவர்கள் மக்களவைக்குள் புகுந்து கோஷங்களையும் எழுப்பி உள்ளனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் முழுக்க பாதுகாப்பானது என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கருப்பு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் மக்களவையில் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய இருவரும் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா அவர்களுடைய நுழைவு ரசீதைக் (entry pass) பயன்படுத்தியதாக முதல் கட்ட தகவல் மக்களவை உறுப்பினர்கள் இத்தகவலை ஆன் ரெக்கார்ட் உறுதிபடுத்தியுள்ளனர்.

Visits: 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *