Wed. Feb 28th, 2024

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ₹6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ₹5,00,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். சேதமடைந்த குடிசைகளுக்கு ₹8,000, மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ₹17,000 , பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ₹22,500, மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ₹8,500, எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு நிவாரணமாக ₹37,500 ,வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ₹4,000/- , முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட) ₹50,000 , பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ₹15,000, முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு ₹1,00,000, முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு ₹7,50,000, சேதமடைந்த வலைகளுக்கு ₹15,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Visits: 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *