Sun. Jun 23rd, 2024

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்ட கண்டன அறிக்கை “திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீதான பதவிப் பறிப்பு நடவடிக்கை திட்டமிட்ட பழிவாங்கும் செயலே ஆகும். அதானி – மோடி ஆகியோரின் கூட்டுச் சதிகளைத் தொடர்ந்து மக்களவையில் அவர் அம்பலப்படுத்தியதால் ஆத்திரமுற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரின் பதவியைப் பறித்துள்ளனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களே பங்கேற்காத நிலையில், அவர்களின் எதிர்ப்பையும் மீறி ஒருசார்பாக முடிவெடுத்து விசாரணைக் குழுவின் முடிவு என்னும் பெயரில் இந்த அடாவடிச் செயலை அரங்கேற்றியுள்ளனர். இதனை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.”

Views: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *