Tue. Apr 23rd, 2024

திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வெள்ள நிவாரணப் பணிகளுக்காகத் தேசிய இயற்கைப் பேரிடர் நிதி ஒதுக்கீட்டில் 5060 கோடி வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டிருந்தார். ஆனால் இன்று ஒன்றிய உள்துறை அமைச்சர், மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து நிதி அமைச்சகம் ஜூலை மாதம் 12ம் தேதி விடுவித்த தொகை 450 கோடியை, இப்போது சென்னை பெருமழை நிவாரணத்திற்கு விடுவித்ததுபோல டுவீட் செய்து பொய் நாடகம் ஆடுகின்றார்.

ஒன்றியத்தில் மோடி ஆட்சிக்கு வந்ததும் பேரிடர் காலங்களில் தமிழகம் கேட்கும் தொகைக்கும் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமே இருந்து வந்துள்ளது.

2015 சென்னை மழை வெள்ளத்தின்போது 25,912 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்ட நிலையில் 1738 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது.

2016-17ம் ஆண்டு வறட்சியின்போது 39,565 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் கேட்கப்பட்ட நிலையில் 1748 கோடி ரூபாயை மட்டுமே மோடி அரசு ஒதுக்கியது.

வர்தா புயலின்போது 22,573 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேட்ட நிலையில் ஒன்றிய அரசு ஒதுக்கியதோ வெறும் 266 கோடி ரூபாய்தான். கேட்ட தொகையில் 1.17 சதவீதம் மட்டுமே கொடுக்கப்பட்டது.

2017-18 ஒக்கி புயலின்போது 9,302 கோடி ரூபாய் கேட்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு ஒதுக்கியது 133 கோடி ரூபாய்தான்.

கஜா புயலின்போது 17899 கோடி ரூபாய் கேட்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு கொடுத்தது 1,146 கோடி ரூபாய் மட்டுமே

நிவர் புயல் பாதிப்பின்போது 3,758 கோடி ரூபய் கேட்கப்பட்ட நிலையில் ஒன்றிய பாஜக அரசு 63.14 கோடி ரூபாய்தான் கொடுத்தது.

கடந்த 2021ம் ஆண்டு மே 17ந்தேதி குஜராத்தை தாக்டே புயல் தாக்கியது. மே19ந்தேதி தானே நேரிடையாக சென்று பாதிப்புகளை ஆராய்ந்த பிரதமர் மோடி உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயும் பின்னர் குஜராத் அரசு கேட்ட முழு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்க உத்தரவிட்டார்!”

Visits: 26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *