Tue. Apr 23rd, 2024

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு முதல்வர்களை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில் மேலிட பார்வையாளர்களை நியமித்து பாஜக தலைமை அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜ்யசபா எம்.பி சரோஜ் பாண்டே,
தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்,
தேசிய தலைவர் டாக்டர் கே.லக்ஷ்மன், தேசிய செயலாளர் ஓபிசி மோர்ச்சாஆஷா லக்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, , மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால்,, தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Visits: 27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *