Sun. Jun 23rd, 2024

ராமநாதபுரம் : 1975ல் வைகை ஆற்றின் குறுக்கே முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் பார்த்திபனூர் மதகு அணை கட்டப்பட்டது. பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து 43 கி.மீ நீளமுள்ள வலது பிரதான கால்வாய் மூலம் 154 கண்மாய்களும், 45 கி.மீ நீளமுள்ள இடது பிரதான கால்வாய் மூலம் 87 கண்மாய்களும் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டதில் இருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், ₹52.50 கோடி மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் தற்போது வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தடையின்றி கால்வாய்க்கு சென்று, 48 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

Views: 44

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *