Wed. Feb 21st, 2024

மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும், மாதம் 12 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும் வெளியான கவர்ச்சி அறிவிப்புகளை தொடர்ந்து, பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.

முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் ₹5 ஆயிரம் கோடி வரை நியோமேக்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது

இதன்பேரில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான பாஜக பிரமுகர் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு கைது செய்துள்ளனர்.

Visits: 27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *