மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் மதுரையில் ASI பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் பெருமையோடு பேசியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி.
தமிழ்நாட்டு வரலாற்றின் புதிய திருப்புமுனை கீழடி. ஆனால் இதே ASI கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதை கூற முடியுமா?
இதே ASI கீழடி பற்றிய அமர்நாத் இராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையை இன்று வரை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன் என்று கூற முடியுமா?
இதே ASI இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை எழுத தீர்மானித்த குழுவில் தமிழ்நாட்டு ஆய்வாளர் ஒருவரை கூட இடம்பெறச்செய்யாதது ஏன் என கூற முடியுமா?”
Hits: 4