பதஞ்சலி விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நவீன மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேதத்தின் விளம்பரங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் பதஞ்சலியிடம் தவறான விளம்பரங்கள் அல்லது தவறான கூற்றுக்கள் எதுவும் செய்ய கூடாது மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
மேலும் தவறாக வழிநடத்தும் மருத்துவ விளம்பரங்களைக் கையாள்வதற்கான திட்டத்துடன் மீண்டும் வருமாறு ஒன்றிய அரசை நீதிமன்றம் கேட்டுள்ளது.
Hits: 3