தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921ம் ஆண்டு ஜூலை 15ல் பிறந்தவர் சங்கரய்யா
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்
1941ல் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் சங்கரய்யா சிறையில் அடைக்கப்பட்டார்
18 மாதங்கள் சிறையில் இருந்து வெளியே வந்தவர், மீண்டும் மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்
மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் 4 ஆண்டுகள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்
1964ல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 3 முறை பதவி வகித்தவர் சங்கரய்யா
தீண்டாமை ஒழிப்பு, சாதி மறுப்பு திருமணங்கள், தொழிலாளர்கள் உரிமைகள் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்தவர் சங்கரய்யா
வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, 95 வயதிலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராடியவர்
தமிழ்நாடு அரசின் தகைசால் விருது முதல் முறையாக 2021ம் ஆண்டு சங்கரய்யாவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்பட்ட ₹10 லட்சத்தையும் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்
பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் சங்கரய்யா தனது 102வது வயதில் சென்னையில் காலமானார்
Hits: 0