13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இன்று நடக்கும் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மும்பையில் விளையாடி வருகிறது.
டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினர். ரோகித் 46 ரன்களிலும், கில் 79 ரன்களில் காயம் வெளியேறினார். அவர்கள் பின் வந்த கோலியும் ஸ்ரேயாஸ்ம் சிறப்பாக விளையாடினர். 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது இந்திய அணி; அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் விளாசினர்
Hits: 3