13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இன்று நடந்த போட்டியில் இந்திய அணியும், நெதர்லாந்து அணியும் பெங்களூரில் விளையாடின.
டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினர். ரோகித் 61 ரன்களிலும், கில் 51 ரன்களிலும் அவுட் ஆகினர். அவர்கள் பின் வந்த கோலியும் 51 ரன்களிலும் அவுட் ஆகினார். ஸ்ரேயாஸ் அதிரடியாக 128 ரன்கள் அடித்தார். கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி 62 பந்துகளில் சதமடித்து அவுட் ஆனார். முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் எடுத்தது.
411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Hits: 16