நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
நாம் வாழும் காலத்தின்
கர்வ காரணங்களுள் ஒன்று
கலைஞானி கமல்ஹாசன்
இத்துணை நீண்ட திரைவாழ்வு
அத்துணை பேர்க்கும் வாய்க்காது
வாழ்வு கலை இரண்டிலும்
பழையன கழித்துப்
புதியன புகுத்தும்
அந்தண மறவரவர்
எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு
இனி என்ன வேண்டும்?
உடையாத உடல் வேண்டும்;
சரியாத மனம் வேண்டும்
வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்
Hits: 17