நடிகர் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஷங்கருடன் இணைந்து நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்நிலையில் கமல்ஹாசன் அவர்கள் பிரமாண்டமான மாஸ் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
கமல் அவர்களின் 234 வது திரைப்படத்தை நாயகன் படத்தை இயக்கிய மணிரத்னம் இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தை கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். படத்தில் துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். படத்திற்கு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Hits: 16